2025 ஜூலை 19, சனிக்கிழமை

சட்டவிரோத சிகரெட் வைத்திருந்தவருக்கு அபதாரம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுக்களை வைத்திருந்தவருக்கு 10 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எ.ஜுட்சன் இன்று செவ்வாய்க்கிழமை உத்தவிட்டார்.

மத்தியமுகாம் பிரதேசத்ததைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவருரே இவ்வாறு கைதுசெய்யபட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபரின் வீட்டை சோதனை செய்தபோது இந்நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 6 சிகரெட்டுக்களும் கைப்பற்றப்பட்டன.

இச்சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவரை இன்று மாலை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் எ.ஜுட்சன் முன்னிலையில்
ஆஜர்படுத்தியபோது  நீதவான் 10 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு மேற்படி நபருக்கு உத்தரவிட்டார்.

மேற்படி நபர் இவ்வாறான குற்றம் புரிவது இது இரண்டாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X