2025 ஜூலை 19, சனிக்கிழமை

திருட்டு சம்பவங்களில் இருவர் கைது

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ்

வீடுகளினை உடைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வௌ;வேறு பிரதேசங்களினை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களை முந்தல் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர்.

கடையாமோட்டை மற்றும் மதுரங்குளி பிரதேசங்களிலில் இரவு நேரத்தில் வீடுகளினை உடைத்து பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து முந்தல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில்,  குறிஞ்வெட்டி, கடையாமோட்டை பிரதேசத்தினை சேர்ந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து மதுரங்குளி பிரதேசத்தில் திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மற்றுமொரு சந்தேக நபர் வேலுசுமன, மதுரங்குளி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாகவும் முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X