2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஹெரோயினுடன் மூவர் கைது

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி, போகம்பறை சிறைச்சாலைக்கு ஹெரொயின் போதைப் பொருளை கொண்டு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரை கண்டி பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகனின் மனைவி ஆகிய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்னனர்.
கொழும்பு ராகம பிரதேசத்தை சேர்ந்த இச்சந்தேக நபர்கள் சொகுசு பஸ் வண்டியில் கொழும்பிலிருந்து கண்டிக்கு வந்து போகம்பறை சிறைச்சாலையை நோக்கி செல்லும் போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட தாயிடம் 2.35 கிராம் ஹெரொயின் போதை பொருளும், மகனிடம் 35 மில்லி கிராம் ஹெரொயினும், மருமகளிடம் 28 மில்லி கிராம் ஹெரொயின் போதை பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மேற்படி மூவரிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X