2025 ஜூலை 19, சனிக்கிழமை

பாதணி விற்பனை நிலைய அலுவலகத்தில் கொள்ளை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 18 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.எல்.ஜவ்பர்கான்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள பாதணி விற்பனை நிலையம் ஒன்றின் அலுவலகம் உடைக்கப்பட்டு 200,000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸில் குறித்த பாதணி விற்பனை நிலையத்தின் உரிமையாளர்  முறைப்பாடு செய்துள்ளார்.

வழமைபோன்று நேற்று சனிக்கிழமை மாலை பாதணி விற்பனை நிலையத்தின் அலுவலகத்தை மூடிவிட்டுச் சென்றுவிட்டு மீண்டும்  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை  அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது அலுவலகத்தின் முன் கதவுகள் உடைக்கப்பட்டு பணப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக குறித்த பாதணி விற்பனை நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X