2025 ஜூலை 19, சனிக்கிழமை

இளைஞரின் சடலம் மீட்பு; சந்தேகத்தில் மூவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமீன்மடு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமீன்மடு பகுதியிலுள்ள புளொக் கல் தயாரிக்கும் வளாகத்தில் அமைந்துள்ள கொட்டிலிலிருந்து இந்த சடலம்  மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, திராய்மடு பகுதியில் வசிக்கும் மேசன் தொழிலாளியான எஸ்.சுமன் (வயது 23) என்பவரின் சடலம் என இந்தச் சடலம்  அடையாளம் காணப்பட்டது.

இந்த நிலையிலேயே சந்தேகத்தின் அடிப்படையில் இந்த 3 பேரையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்

இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X