2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களெனக் கருதப்படும் ஐவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக  கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றன.  இப்பிரதேசத்திலுள்ள வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த வேளையில், அவர்கள் மீது ஒருவகையான திரவத்தை தெளித்து  மயக்கமடையச் செய்துவிட்டு  தங்கநகைகளையும் ஏனைய பொருட்களையும் கொள்ளையிட்டுள்ளனர்.

இக்கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்ற மட்டக்களப்பு மாவட்ட விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் சந்தேகத்தின் அடிப்படையில் ஐவரை நேற்று வியாழக்கிழமை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஒருவரிடமிருந்து டிஜிட்டல் கமெராவொன்றையும் கைப்பற்றியுள்ளதகாவும் பொலிஸார் கூறினர்.

இதில் 4 சந்தேக நபர்களை இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்த பொலிஸார், மற்றைய சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X