2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சிறுவனின் சடலம் மீட்பு; சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு, ஓட்டமாவடி - மடுவத்து வீதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வாழைச்சேனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கடந்த 17ஆம் திகதியிலிருந்து இந்தச் சிறுவன் காணாமல் போயிருந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
செம்மண்ணோடை பாடசாலை வீதியைச் சேர்ந்த மீராலெப்பை முஹம்மட் ஹிமாஸ் (வயது –11) என்ற விசேட தேவையுடைய சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

இந்தச் சிறுவனுடன் பழக்கமானவர் எனக் கூறப்படும் இந்தச் சந்தேக நபர், சிறுவன் காணாமல் போன தினம்  தலைமறைவாகியிருந்தார்.  இது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

இந்தச் சிறுவனின் கொலைச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X