2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சிறுவனின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மஹாவலி கங்கையிலிருந்து சிறுவன் ஒருவனின் சடலம் நேற்று வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது.

கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் பிடிவீர லியனகே சஜித்குமார (வயது  17) என்ற மாணவனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு கட்டுகஸ்தோட்டையில் நடைபெற்ற களியாட்ட விழா ஒன்றை பார்வையிடச் சென்ற இந்தச் சிறுவன் வீடு திரும்பவில்லை என இந்தச் சிறுவனின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து விசாரணையை முன்னெடுத்த பொலிஸார், கடற்படையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டுள்ளதாகவும் கூறினர். 
இந்தச் சிறுவன் மர்மமான முறையில் இறந்து காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் கண்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை கட்டுஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X