2025 ஜூலை 17, வியாழக்கிழமை

போலி ஆவணங்களை சமர்ப்பித்து அடகு நகைகளை மீட்ட இருவருக்கு சிறை

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 24 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
அரச வங்கியொன்றில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மீட்ட இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை விசேட பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினராலேயே அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவ்விருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து நீதவான் ரீ.சரவணராஜா ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

2011 ஆம் ஆண்டு அரச வங்கியொன்றில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை போலியான ஆவணங்களையும், முத்திரையும் பயன் படுத்தி வங்கியிலிருந்து சட்;ட விரோதமாக தங்க நகைகளைப் பெற்றுக் கொண்ட இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த பெண்ணொருவரும் ஆண் ஒருவருமே குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

குற்றத்தை ஒப்புக் கொண்ட இருவர் மீதும்   தலா நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவர்களுக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட  18 மாத நிறைத்தண்டனையும் தலா ரூபா 1,000 தண்டப்பணமும் செலுத்த நீதவான் தீர்ப்பளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X