2025 ஜூலை 17, வியாழக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் பெண் காயம்; சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம், கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மேல் கிரிமெட்டியான பிரதேசத்தில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் காயமடைந்துள்ளார்.

மேலும், இவர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் வைத்தியர் ஒருவரை கைதுசெய்துள்ளதுடன், இவரிடமிருந்து துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளதாக கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று சனிக்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில் கிரிமெட்டியான பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே  பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர் தற்போது மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெண்ணும் அயலவர்கள் ஆவர். இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சிறிய பிரச்சினையைத் தொடர்ந்து சந்தேக நபர் தனது வீட்டின் மேல் மாடிக்குச் சென்று துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை கொஸ்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X