2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கொள்ளைகளில் ஈடுபட்ட ஐவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 28 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகராசா சரவணன்


அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த 3 வருடங்களாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் 5 பேரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், இவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 16 ½  பவுண் தங்கநகைகள், 35,000 ரூபா பணம், 6 கையடக்கத் தொலைபேசிகள், எல்.சி.டி. ரக தொலைக்காட்சிப்பெட்டி ஒன்று, கணினி உள்ளிட்டவற்றையும் இவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றையும்; கைப்பற்றியுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சந்தேக நபர்கள் கடந்த 3 வருடங்களாக திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள வீடுகள் மற்றும் பாடசாலைகளை உடைத்து கொள்ளையிட்டு வந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்தச் சந்தேக நபர்களை வீடுகளில் கைதுசெய்துள்ளதாகவும் 18 முதல்  20 வயது வரையானவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X