2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இளைஞரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 30 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

இளைஞர் ஒருவரின் சடலம் வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய வளாகத்திலிருந்து இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்களினால் இந்த இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுந்தரபுரத்தை சேர்ந்த சாந்தகுமார் சதீஸ்வரன் (வயது 31) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இந்த இளைஞர் மத்திய கிழக்கு நாடு ஒன்றிலிருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தாயகம் திரும்பியிருந்தார். இந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை மாலை தனது மோட்டார் சைக்கிளில் சென்ற இந்த இளைஞர்; இரவாகியும் வீடு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை காலை உறவினர்கள் இவரைத் தேடியபோதே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கிராமத்தின் கிராம அலுவலகர் தெரிவித்தார்.

சடலம் மீட்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் மதுபான போத்தல்கள் காணப்பட்டதாகத்  தெரிவித்த கிராம அலுவலகர், இவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலி காணவில்லை  என்று தன்னிடம் உறவினர்கள் கூறியதாகவும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X