2025 ஜூலை 17, வியாழக்கிழமை

உல்ஹிட்டியாவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கொள்ளை

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 10 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வென்னப்புவ, உல்ஹிட்டியாவ பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து தங்கநகைகளும் பணமும் கையடக்கத் தொலைபேசிகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இவ்வீட்டினுள் நேற்று திங்கட்கிழமை இரவு நுழைந்த கொள்ளையர்கள்,  வீட்டு உரிமையாளரை தாக்கிவிட்டு தங்கநகைகளையும் பணத்தையும் கையடக்கத் தொலைபேசிகளையும்  கொள்ளையிட்டுச் சென்றதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

தான் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்களில் வந்த ஆணொருவரும் பெண்ணொருவரும் யூரோ நாணயம் மாற்றிக்கொள்ள வேண்டுமென்று தன்னிடம் கேட்டனர். இதற்கு தான் வெளிநாட்டு நாணயங்கள் மாற்றும் தொழில் செய்பவரல்லவென பதிலளித்ததாகவும் வீட்டு உரிமையாளர் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

மேலும், தான் இவ்வாறு பதிலளித்த பின்னர் அவர்கள் இருவரும் அருந்துவதற்கு தண்ணீர் கேட்டனர்.  அவர்களுக்கு தண்ணீர் எடுத்துக்கொண்டு  தான் வந்தபோது கையில் கைத்துப்பாக்கியுடன் வந்தவருடன் மேலும் இருவர் தன்னைத் தாக்கி வீட்டு அறையொன்றில் கட்டிவைத்துவிட்டு கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றதாகவும் பொலிஸாரிடம் வீட்டு உரிமையாளர் கூறியுள்ளார்.

அறையிலிருந்த அலுமாரியை உடைத்து அதிலிருந்து 760,000  ரூபா பெறுமதியான தங்கநகைகளையும்  92,600 ரூபா பணத்தையும்  35,000  ரூபா பெறுமதியான 3 கையடக்கத் தொலைபேசிகளையும் கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்றதாகவும் பொலிஸாரிடம் வீட்டு உரிமையாளர் கூறியுள்ளார்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணையை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X