2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தகராறினால் தன்னைத்தானே குத்திக் காயப்படுத்தியவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

மறைமுகமாக தான் விரும்பிய பெண் ஒருவருடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து தன்னைத்தானே கத்தியால் குத்திக் காயப்படுத்திக்கொண்டு  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தங்கொட்டுவை, வலச்சிவத்தை பிரதேசத்திலேயே நேற்று புதன்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த லால் சந்திரசிரி (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  தங்கொட்டுவை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இவ்வாறு உயிரிழந்த நபரின் மனைவி இவரை விட்டுப் பிரிந்து சென்று வெளிநாட்டில் தொழில் செய்து வருகின்றார். இந்த நிலையில்,  உயிரிழந்த நபர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக தெரியவருகின்றது.

இந்த நிலையில், உயிரிழந்த நபருக்கும் அவர் மறைமுகமாக விரும்பிய பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையால் இந்தப் பெண் தனது மகளின் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் இந்தப் பெண்ணை தனது வீட்டுக்கு வருமாறு சென்று உயிரிழந்த நபர் அழைத்தபோது இந்;தப் பெண் இவருடன் செல்வதற்கு மறுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தவர் தன்னைத்தானே கத்தியால்  குத்திக் காயப்படுத்திக் கொண்டுள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயங்களுடன் தங்கொட்டுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர், மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அங்கு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X