2025 ஜூலை 17, வியாழக்கிழமை

குடும்பஸ்தர் கொலை தொடர்பில் ஒருவர் கைது

Super User   / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பொல்லால் தாக்கி கூரிய ஆயுதம் ஒன்றினால் கழுத்து வெட்டப்பட்ட இளம் குடும்பஸ்தரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். 

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பத்துளுஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான காளிதாசன் உதயச்சந்திரன் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் சனிக்கிழமை அதிகாலை பத்துளு ஓயா பாலத்திற்கு அருகிலுள்ள காட்டு பகுதியிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவரின் சடலத்திற்கு அருகில் மீட்கப்பட்ட கையடக்கத் தொலைபேசியை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை மேற்கொண்ட முந்தல் பொலிஸார் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

இதன்போது அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது கொலை தொடர்பான விபரங்களை பெற முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரின் மனைவியுடன் கள்ளத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்ததன் காரணமாகவே இக்கொலையைச் செய்ததாகவும் முதலில் பொல்லால் தாக்கியதாகவும் பின்னர் கத்தியால் கழுத்தை வெட்டியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் முந்தல் பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X