2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஆயுதமுனையில் தங்கநகைகளும் பணமும் கொள்ளை

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 03 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

மஹாகும்புகடவெல பிரதேத்திலுள்ள வீடொன்றிலிருந்து தங்கநகைகளும் பணமும் ஆயுதமுனையில் கொள்ளையிடப்பட்டுள்ளன.

வியாபாரியொருவரின் வீட்டிலேயே நேற்று புதன்கிழமை இரவு இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.

இவ்வீட்டினுள் திடீரென்று நுழைந்த இனந்தெரியாத நபர்கள் சிலர், சுமார் 350,000 ரூபா பெறுமதியான தங்கநகைகளையும் பணத்தையும் ஆயுதமுனையில் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தங்களுக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X