2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இறைச்சிக்காக மிருகங்களை வேட்டையாடியவர் கைது

Kogilavani   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன் 

இறைச்சிக்காக காட்டுப்பன்றி உட்பட பல மிருகங்களை வேட்டையாடிய இருவரை எதிர்வரும் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு   அநுராதபுரம் மேலதிக மாவட்ட நீதவான் சந்திம எதிரிமான்ன உத்தரவிட்டார்.

மிஹிந்தலை அபய பூமிப் பகுதிக்குள் திருட்டுத் தனமாகப் நுழைந்து காட்டுப் பன்றி உட்பட சில மிருகங்களை வேட்டையாடி இறைச்சிக்காக கொண்டு சென்ற சம்பவம் தொடர்பில் இருவர் கடந்த 2 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

வனஜீவி அதிகரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இராணுவ வீரர் ஒருவர் உட்பட இருவர், வேட்டையாடிய மிருகங்களை முச்சக்கர வண்டியில் இட்டு கொண்டு செல்லும் வேளையில் கைதுசெய்யப்பட்டதாக அநுராதபுரம் வனஜீவி திணைக்கள உதவி பணிப்பாளர் டப்ளியு. எஸ். வேரகம தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X