2025 ஜூலை 17, வியாழக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெமட்டகொடவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 27 வயதான ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெமட்டகொட, பேஸ்லைன் வீதியில் உள்ள களனிவெளி  ரயில் கடவைக்கு அருகிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவருடன் காரில் வந்ததாகக் கூறப்படும் ஏனைய மூவரும் இதன்போது தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொரளையைச் சேர்ந்த தேபுவன ஆராச்சிகே சஜீத் பிரியந்த என்பவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் எவரும் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X