2025 ஜூலை 17, வியாழக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டிய, வில்கமுக பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள துப்பாக்கி சூட்டில்  இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்தனர்

25 வயதான எம்.பந்துல என்ற இளைஞரே துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் 3 பேர் தெஹியத்தகண்டிய மகாவலிகங்கையைக் கடந்து வில்கமுக தேசிய பூங்காவுக்குச் சென்றுகொண்டிருந்தனர். இதன்போது யுதகனாபிட்டிய பிரதேசத்தில் இவர்கள் மீது, இனந்தெரியாதேர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் துப்பாக்கிச் சூட்டில் மேற்படி இளைஞர் மரணமடைந்துள்ள அதேவேளை, ஏனைய இருவரும் உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தவரின் சடலம் சல்பிட்டிகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X