2025 ஜூலை 17, வியாழக்கிழமை

தாக்குதலில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேவாபுரம் கிராமத்தில் தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தேவாபுரம் பத்தினியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த  நத்தேலகே நெல்சன் கோசல (வயது 32) (யேவாந என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். 

நேற்று புதன்கிழமை மாலை குடும்பத்தினுள் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின்போது இவர் உறவினர்களால் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்துள்ளதாக இவரது மனைவி பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அடிபட்டு வீழ்ந்த கணவரை உடனடியாக சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், இவர் நேற்று புதன்கிழமை இரவு மரணமடைந்துள்ளதாக இவரது மனைவி கூறினார்.

நேற்று புதன்கிழமை இரவு  சம்பவ இடத்திற்கு வருதை தந்த ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியாழ் சாட்சியங்களைப் பதிவு செய்துடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக  செங்கலடிப் பிரதேச வைத்தியசாலைக்கு  எடுத்து வரப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X