2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மனைவியைக் கத்தியால் குத்திய கணவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். குப்பிளான் பகுதியில் மனைவியை கத்தியால் குத்தியதாகக் கூறப்படும்  கணவரை  இன்று ஞாயிற்றுக்கிழமை  கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை  பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, மனைவியை கத்தியால் குத்திக் காயப்படுத்திய கணவர் தலைமறைவாகியுள்ளார்.

இது தொடர்பில்  விசாரணைகளை மேற்கொண்டுவந்த சுன்னாகம் பொலிஸார்,  தலைமறைவாகியிருந்த கணவரை கைதுசெய்துள்ளனர்.

இந்த கத்திக்குத்தில் படுகாயமடைந்த மனைவி யாழ். போதனா வைத்தியசாலையின்; அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

ரவிக்குமார் வசந்தகுமாரி என்பவரே கணவரின் கத்திக்குத்துக்கு உள்ளாகியுள்ளார்.

இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணம் குப்பிளானைச் சேர்ந்த தன்னை, கணவர் கொடுமைப்படுத்தி வருவதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனைவி முறைப்பாடு செய்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X