2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிணற்றிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சி.எம்.ரிஃபாத்

தந்தை ஒருவரினதும் அவருடைய 2 வயதான மகள் ஒருவரினதும் சடலங்கள் கிணறு ஒன்றிலிருந்து இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளன.

கண்டி, பன்வில பிரதேசத்தில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்தே மேற்படி இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட 2 வயதான பிள்ளையின் தாய் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுச்சென்றுள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விரிவான விசாரணைகளை பன்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X