2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

ஆற்றில் மீன்பிடிப்பதற்குச் சென்ற இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புத்தளம் மாவட்டத்தின் எழுவன்குளம் பகுதியில் உள்ள ஆற்றில் மீன்பிடிப்பதற்குச் சென்ற இளைஞரே  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

எழுவன்குளம் பகுதியைச் சேர்ந்த   26 வயதான  இளைஞர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை முற்பகல் ஆற்றில் மீன்பிடிப்பதற்குச்  சென்ற இந்த இளைஞர், மாலையாகியும் வீடு திரும்பாததினால் இவரைத் தேடும் பணியில் பிரதேச மக்கள்  ஈடுபட்டுள்ளனர். இந்த  நிலையில், இந்த இளைஞர் எழுவன்குளம் ஆற்றுப்பகுதியிலிருந்து  நேற்று புதன்கிழமை இரவு சடலமாக  மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X