2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சாரதியை தாக்கிவிட்டு பணம் அபகரிப்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 01 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பொருட்களை வாகனத்தில் கொண்டுசென்று விற்பனை செய்யும் வாகனத்தின் சாரதியைத் தாக்கிவிட்டு அவரிடமிருந்து 55,000 ரூபாவை இருவர் அபகரித்துச்சென்றுள்ளனர்.

கருவலகஸ்வெவ, குடாமெதவச்சிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அன்றாட விற்பனையை முடித்துவிட்டு தாம்;; வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தமது  வாகனத்தின் முன் மோட்டார் சைக்கிளை குறுக்காக நிறுத்திவிட்டு வந்து  வாகனத்தின் சாரதியைத் தாக்கியதுடன், அவரிடமிருந்த பணத்தையும்  இவ்விருவரும் அபகரித்துச்சென்றுள்ளதாக  வாகனத்திலிருந்த மற்றொருவர் நருவலகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து  விசாரணைகளை முன்னெடுத்த  கருவலகஸ்வெவ பொலிஸார், பணத்தை அபகரித்துச் சென்ற இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளை குடாமெதவச்சிய பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைப்பற்றியுள்ளனர்.

பணத்தை அபகரித்துக்கொண்டு தப்பிச்சென்ற இருவரையும் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக கருவலகஸ்வெவ பொலிஸார்  தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X