2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 06 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

நாத்தாண்டிய, பஹன்கொட  பிரதேசத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மாராவில பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சடலத்தை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

நாத்தாண்டிய, பஹன்கொடைப் பிரதேசத்தில் வசிக்கும் ஹெட்டியாராச்சிலாகே தொன் ரஞ்சித் (வயது 47) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவரின் மனைவி வெளிநாட்டுத் தொழில் பெற்றுச்சென்று வெளிநாட்டில் வசிப்பவர் என்பதுடுன், இவர் தனது ஒரே மகளை திருமணம் முடித்துக் கொடுத்த பின்னர்; தனது வீட்டில் இவர் மட்டும் தனியாக வாழ்ந்து வந்துள்ளதாகவும்  விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X