2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மெனிக்பாம் பகுதியில் ஆணின் சடல எச்சங்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 18 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா, மெனிக்பாம் மூன்றாம் பிரிவுப் பகுதியிலுள்ள வீடொன்றின் மலசலகூடக்குழியிலிருந்து ஆணொருவரின் சடல  எச்சங்களை நேற்று செவ்வாய்க்கிழமை  செட்டிகுளம் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மெனிக்பாம் மூன்றாம் பிரிவுப் பகுதியிலுள்ள குறித்த வீட்டில் நீண்ட நாட்களாக வசித்துவந்த 30 வயதான பெண் மற்றும்  26 வயதான  அவரது கணவர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லாததுடன், வீடும் பூட்டப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டபோது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் துர்நாற்றம் வீசியதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த வீட்டு உரிமையாளரான பெண் கடந்த 15ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்;.

இதன்போது தனக்கும் தனது கணவருக்கும் இடையில்  கடந்த 2011.11.09 அன்று இரவு சண்டை ஏற்பட்டதாகவும் கணவர் வைத்திருந்த கோடரியை பறித்து கணவரை தாக்கியதால் கணவர்; உயிரிழந்துவிட்டதாகவும் பின்னர் மலசலகூடக்குழியில் கணவரின் சடலத்தை போட்டு மூடியதாகவும் செட்டிகுளம் பொலிஸாருக்கு மனைவி  வாக்குமூலம் அளித்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த வீட்டில் வசித்து வந்த முனியாண்டி துரைச்சாமி (வயது 26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (17) சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா நீதிவான் ஏ.சி.ரிஸ்வான் விசாரணைகளை மேற்கொண்டதுடன், குறித்த வீட்டின்; மலசலகூடக்குழியை உடைக்குமாறும் பணித்துள்ளார்.

இந்த நிலையில், மலசலகூடக்குழியை உடைத்த குறித்த ஆணின்  சடல எச்சங்களை  மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

இதற்கிடையில் கைதுசெய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X