2025 ஜூலை 17, வியாழக்கிழமை

காட்டிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட  புலயவெளிக் கிராமத்திலுள்ள காட்டுக்குள்ளிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. 

புலயவெளிக் கிராமத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் சுயந்தன் (வயது 23) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது சடலத்தை உறவினர்கள்  அடையாளம் காட்டியுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை பார்வையிட்ட ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் பணித்தார்.

இந்த நிலையில், பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

காட்டுக்குள்ளிருந்து கையடக்கத்தொலைபேசி அலறும் சத்தத்தைக் கேட்டு தான் அங்கு சென்று பார்த்ததாகவும் இதன்போது அங்குள்ள மரத்தடியில் இந்தச் சடலம் காணப்பட்டதாகவும் விசாரணையின்போது உறவினரான பாட்டியொருவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X