2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 08 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம் – மன்னார் வீதியிலுள்ள அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தை இன்று புதன்கிழமை காலை மீட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தகவல் கிடைத்தது.

குறித்த சடலம் இதுவரையில்  அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர். 

சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்ட புத்தளம் பதில் நீதவான் பஸால் அபூதாஹீர், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை  புத்தளம் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு பணித்தார்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X