2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பொலிஸ் செய்திகள்

Kanagaraj   / 2014 ஜனவரி 16 , மு.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

1.    துப்பாக்கி மீட்பு

தமன பொலிஸ் பிரிவில் மொரஹபள்ளம் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி தயாரிக்கப்பட்ட உள்ளூர் துப்பாக்கி,வெடிப்பொருட்களை வைத்திருந்த 40 வயதான சந்தேநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை அம்பாறை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 22 ஆம் திகதி வரையிலும் தடுப்புகாவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

2. நீரில் மூழ்கியவரை காணவில்லை

பத்தேகம,நயாபாமுல பிரதேகத்தில் கிங்கங்கையில் நேற்று குளித்துகொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போன 49 வயதான செல்லையா சங்கராஜா என்பரை பத்தேக பொலிஸாரும் காலி கடற்படையைச்சேர்ந்தவர்களும் தேடிவருகின்றனர்.

3. மூதாட்டியின் சடலம் மீட்பு


இரத்தினபுரி, கெடிலியன்பள்ளம் கஹங்கம பிரதேசத்திலுள்ள வயல்வெளியில் படுகொலை செய்யப்பட்டுகிடந்த 64 வயதான கமலா ஐராங்கனி என்பவரின் சடலத்தை அவரது கணவன் அடையாளம் காட்டியுள்ளார்.சந்தேகநபர் அடையாளம் காணப்படவில்லை.

4. சிறுவன் காப்பாற்றப்பட்டான்


நிலாவெலி கடலில் தங்களுடைய உறவினர்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது கடலில் மூழ்கிய நாவலப்பிட்டியை சேர்ந்த சிறுவன் காப்பாற்றப்பட்டுள்ளார்.

5. வெள்ளத்தில் 75 பேர் பாதிப்பு

இங்கினியாகலையில் பெய்த அடைமழைக்காரணமாக 17 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 75 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

6. மின்னல் தாக்கத்தில் 9 பேர் பாதிப்பு


மாரவில், இஹலகம மெதகம பிரதேசத்திலுள்ள விஹாரையில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கியுள்ளது. இதனால் அந்த விஹாரையின் தேரர் உட்பட பெண்கள் நால்வரும், ஆண்கள் நால்வரும் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

7. நீரில் மூழ்கி பலி

குச்சவெலி கடலில் குளித்துக்கொண்டிருந்த திருகோணமலையைச்சேர்ந்த 30 வயதான ஜெயரத்னம் ரொபின்சன் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

8. ஆணின் சடலம் மீட்பு


குச்சவெலி, கும்புறுப்பிட்டிய எனுமிடத்தைச்சேர்ந்த 40 வயதான சித்ரவேல் ரவீந்திரன் என்பவர் அவர் வசிக்கும் இடத்திலேயே விழுந்து மரணமடைந்துள்ளார். அவருடைய சடலம் திருகோணமலை வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

9. மதுபானம் விற்ற ஐவர் கைது


நிக்கரவெட்டியவிலுள்ள திரையரங்கு ஒன்றில் நேற்று மதுபானம் விற்றுக்கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்த மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

10. ஹெரோயினுடன் கைதானவர் தடுத்துவைப்பு

பதுளை முதியங்கனை விஹாரைக்கு அருகில் வைத்து ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவரை தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார். அவரிடமிருந்து 1 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினே மீட்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X