2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஊர்காவற்றுறையில் இளைஞரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 19 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். ஊர்காவற்றுறையில் நெருசிமுனைப் பற்றைக்காட்டுப் பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை  (18) மாலை மீட்கப்பட்டு  யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

ஊர்காவற்றுறையைச் சேர்ந்த அன்ரன் ஜஸ்ரின் (வயது 19) என்ற இளைஞர் கடந்த 14ஆம் திகதியிலிருந்து காணாமல் போனதாக அன்றையதினமே ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் இவரது தாயார் முறைப்பாடு செய்திருந்தார்.

இவர் தன்னுடன் சண்டை பிடித்துக்கொண்டு சென்றதாகவும் முறைப்பாட்டில் தாயார் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X