2025 ஜூலை 17, வியாழக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் மரணம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 24 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்,ஹேமலதா ஹேவகே

தங்கொட்டுவையில் கொள்ளையர்கள் இருவர் நேற்று வியாழக்கிழமை இரவு மேற்கொண்ட  துப்பாக்கிச் சூட்டில் வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரான டபிள்யூ.கிரிஸ்டோபர் சுதத் பிரியந்த (வயது 48) என்பவர் மரணமடைந்துள்ளதாக தங்கொட்டுவை பொலிஸார் தெரிவித்தனர். 

தங்கொட்டுவை, சிங்கக்குளி பிரதேசத்திலுள்ள தேங்காய் வர்த்தகரான ஜினதாச முனசிங்க என்பவரின்  வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவர்  வீட்டிலிருந்தவர்களை  துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியதுடன், அவர்களை அறையில் அடைத்து வைத்துவிட்டு 240,000 ரூபா பணத்தையும் தங்கநகைகளையும்  கொள்ளையிட்டுக்கொண்டு செல்ல முற்பட்டனர்.

இதன்போது, ஜினதாச முனசிங்கவின்  நண்பரான டபிள்யூ.கிரிஸ்டோபர் சுதத் பிரியந்த இவரது  வீட்டுக்கு  ஏதேச்சையாக வாகனத்தில்  வந்ததைக் கண்ட  கொள்ளையர்கள் இருவரும் இவர் மீது  துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் கூறினர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வர்த்தகர் தங்கொட்டுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும், அவர் மரணடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X