2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 24 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.ஜெகநாதன்

யாழ். பண்ணைக் கடலிலிருந்து  இன்று வெள்ளிக்கிழமை நாராந்தனை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அருள்மதன் (வயது 30) என்பவர் சடலமாக  மீட்கப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில் மேற்படி சடலம்  மிதப்பதைக் நேற்று வியாழக்கிழமை கண்ட மீனவர்கள், தகவல் வழங்கியதாகவும் பொலிஸார் கூறினர்.

சம்பவ இடத்திற்கு வந்த திடீர் மரண விசாரணை அதிகாரி என்.பிரேம்குமார் மற்றும் யாழ். நீதிமன்ற பதில் நீதவான் மூ.திருநாவுக்கரசு சடலத்தை பார்வையிட்டனர்.  மேலும், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை  யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு  நீதவான் பணித்தார்.

சடலமாக மீட்கப்பட்டவரை  03 நாட்களாகக்  காணவில்லையென்று உறவினர்கள் தேடினர். எனினும், இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை.

குறித்த நபர் நேற்றுமுன்தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை நோக்கிச் செல்வதற்கு நின்றதாக அவரை இறுதியாகக் கண்டவர்கள் தெரிவித்தனர்.

தன்னை காப்பாற்றுமாறு நேற்று வியாழக்கிழமை இவர் தொலைபேசியில்; தெரிவித்ததையடுத்து, தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டதாக உறவினர் ஒருவர் தெரிவித்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
 
 
 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X