2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முதியவரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 26 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். ஆவரங்கால் பகுதியிலுள்ள தேநீர் வியாபார நிலையமொன்றில் சிற்றூழியராக கடமையாற்றும்  52 வயதுடைய குமாரசுவாமி என்பவர் சடலமாக  மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கே.எம்.சி.பிரதீப்செனவிரட்ண தெரிவித்தார்.

திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.சிவரூபன் மற்றும் மல்லாகம் நீதிமன்ற பதில் நீதவான் எம்.எ.அன்ரனி சடலத்தை பார்வையிட்டனர்.  மேலும், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை  யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் பணித்தார்.

இதுவரைகாலமும் கொழும்பில் வசித்து வந்த குறித்த நபர்,  கடந்த வாரத்திலிருந்து ஆவரங்கால் பகுதியிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கிவந்துள்ளார். இவர் கொழும்பிலிருந்து வந்த நாளிலிருந்து சுகவீனம் காரணமாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை உறவினருடன்  முரண்பட்ட இவர்,  மது அருந்தி விட்டு குறித்த வியாபார நிலையத்தில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, திடீரென உயிரிழந்துள்ளாரென்று உறவினர் தெரிவித்ததாக அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X