2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழ். பண்டத்தரிப்பு வீடொன்றில் பெறுமதியான நகைகள் திருட்டு

A.P.Mathan   / 2014 ஜனவரி 31 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
-செல்வநாயகம் கபிலன்
 
யாழ். பண்டத்தரிப்பிலுள்ள வீடொன்றில் 6½ இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் நேற்றிரவு (30) திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் இன்று (31) தெரிவித்தனர்.
 
குறித்த வீட்டின் உரிமையாளர் நேற்றுமுன்தினம் (29) யாழ்ப்பாணத்திலுள்ள தனது மகனின் வீட்டிற்கு சென்று திரும்பிய வேளையில், வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு, அங்கிருந்த நான்கு மோதிரங்கள், ஒரு சங்கிலி உள்ளிட்ட தங்க நகைகள் திருட்டுப்போயுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X