2025 ஜூலை 17, வியாழக்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வென்னப்புவவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த லுணுவில, கிரிமெட்டியானவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த பியல் இந்திரஜித் (வயது 28) என்பவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் புதன்கிழமை (05) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைச் சம்பவமொன்று தொடர்பான வழக்கில் பிணையில் விடுதலையான  ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாகவும் பொலிஸார் கூறினர்.

தனது வீட்டிலிருந்த இவரை, வானொன்றில் வந்த சிலர் சந்திக்க வேண்டுமெனக் கூறி வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்று துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டனர். இதன்போது கலவரமடைந்து இவர் வீட்டுக்குள் ஓடியபோது பின்புறத்தில்  துப்பாக்கிச் சூடு பட்டு காயமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர். 

இவரது உடலில் 26 சன்னங்கள் பட்ட காயங்கள் காணப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், தாங்கள் வந்த வானில் தப்பிச்சென்றுள்ள சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X