2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 09 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ். அச்சுவேலி, பத்தமேனிப் பகுதியிலுள்ள தோட்டக் கிணற்றிலிருந்து அப்பகுதியைச் சேர்ந்த தேவகுமார் ஸ்ரீகலா (வயது 48) என்பவர் சடலமாக ஞாயிற்றுக்கிழமை (09) மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெ.எ.எஸ்.என்.கே.ஜெயசிங்க தெரிவித்தார்.

மேற்படி கிணற்றில் சடலம் காணப்படுவதை அவதானித்த  ஒருவர் தகவல் வழங்கியதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், சனிக்கிழமை (08)  இரவு வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த இவர், திடீரெனக் காணாமல் போனதாக  பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினர் ஞாயிற்றுக்கிழமை (09) அதிகாலை முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறினார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் பஷீர்  மொஹமட் சடலத்தை பார்வையிட்டனர்.

சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில்  ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X