2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

யாழில் இளைஞரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 26 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்

யாழ். நாவலர் வீதியிலுள்ள உயர் கற்கைநெறிகள் நிறுவனத்தின் கட்டிடத்தொகுதியிலிருந்து அண்ணா வீதி வவுனியாவைச்  சேர்ந்த லெனின் ரூக்ஷன் (வயது 26) என்பவர் சடலமாக மீட்கப்பட்டதாக  யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

ஓமந்தையிலிருந்து பளைவரையான ரயில்  பாதை அமைக்கும் நிறுவனமொன்றின் அலுவலக உதவியாளராக கடமையாற்றிவந்த இவர் மேற்படி கட்டிடத்தொகுதியில் தங்கி வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மேற்படி கட்டிடத்தொகுதியில்  சடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

குறித்த இளைஞரின் அறை  எரியூட்டப்பட்டிருந்தது. மதுபோதையில் காணப்பட்ட இவர் தனது   அறையிலிருந்த பொருட்களை எரியூட்டிவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் மு.திருநாவுக்கரசு சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைக்கு சடலத்தை  யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X