2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

இளம் தாய் தீ மூட்டி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 13 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தின் எழுத்தூர், தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்த இளம் தாயான நிஸாந்தன் தேவிகா( வயது 27) என்பவர் தனக்குத்தானே தீ மூட்டி உயிரிழந்ததாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை (12) இரவு அப்பகுதியிலுள்ள கடைக்குச் சென்று மண்ணென்ணை வாங்கிக்கொண்டு வீடு சென்ற குறித்த தாய், வீட்டுச் சமயலறையில்  தனக்குத்தானே தீ மூட்டியதாக விசாரணையிலிருந்து தெரியவருவதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்நிலையில், வீட்டில் தொலைக்காட்சி  பார்த்துக்கொண்டிருந்த அவரது கணவர் தனது மனைவி தீயில் எரிவதைக்  கண்டு கூச்சலிட்டதாகவும்  இதனைத் தொடர்ந்து அயலவர்கள் வந்து தீயை அணைத்து குறித்த தாயை  மன்னார் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இருப்பினும், இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர்  02 பிள்ளைகளின் தாய் ஆவார்.

இது தொடர்பில் விரிவான  விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X