2025 ஜூலை 17, வியாழக்கிழமை

குளிக்கச் சென்ற பெண் சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஞ்ஜன்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டிக்கோயா வனராஜா தோட்டத்திலுள்ள டிக்கோயா ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை (20) குளிப்பதற்குச்  சென்ற அத்தோட்டத்தைச் சேர்ந்த ஆன்டி மாரியாய் (வயது 40) என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

வனராஜா தேயிலை தொழிற்சாலையில் வேலை செய்யும் இவர், இரவு முழுவதும் தொழிற்சாலையில் வேலை செய்துவிட்டு திரும்பிய நிலையில் குளிப்பதற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், குளிப்பதற்குச்  சென்ற இவர் இறந்து  கிடப்பதாக தகவல் கிடைத்ததாக இப்பெண்ணின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

இவர் திருமணமாகாதவர் என்பதுடன் தனது சகோதரியின் வீட்டில் சிறு வயது முதல் வாழ்ந்து வந்தவர்; ஆவார் எனவும் அவர் கூறினார்.  

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக  டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X