2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கிணற்றிலிருந்து சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 மே 05 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். சுன்னாகம் மேற்கு மூர்த்தியான் கூடல் பகுதியிலுள்ள வயல் கிணற்றிலிருந்து 65 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின்  சடலத்தை  திங்கட்கிழமை (05) மீட்டுள்ளதாக  சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கிணறு உள்ள பகுதியில்  துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, கிணற்றை அப்பகுதி மக்கள் பார்வையிட்டுள்ளனர். இதன்போது சடலத்தைக் கண்ட மக்கள் கிராம அலுவலருக்கு தெரியப்படுத்தினர். 

இது தொடர்பில் கிராம அலுவலர் தங்களது கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X