2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

பெண்ணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 மே 11 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்புக் - எல பள்ளிவாசல் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனியாக வசித்துவந்த சுமார் 80 வயது மதிக்கத்தக்க  சித்தி சாதுனா என்பவர் கொல்லப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பள்ளிவாசல் நிர்மாணித்துக்கொடுத்த இவ்வீட்டில் வசித்துவந்த இவர், அயலவர்களுடனும் பழகி வந்துள்ளார். நேற்று சனிக்கிழமை   காலையிலிருந்து  இவர்   தென்படாமையால் அயலவர்கள் இவரை  தேடினர். இந்நிலையில் இவரது  வீட்டுக் கதவு பூட்டப்பட்டிருந்ததால், கூரை வழியாக பார்த்தபோது இவர் இரத்த வெள்ளத்தில் மரணமடைந்து கிடந்தமை தெரியவந்தது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டது.

கண்டி பதில் நீதவான் மஹிந்த லியனகே ஞாயிற்றுக்கிழமை  (11) மரண விசாரணை மேற்கொண்டதுடன்,   பிரேத பரிசோதனைக்காக சடலத்தை கண்டி வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

இவரது ஆடைகள் களையப்பட்டிருந்ததால் இவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என  பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X