2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

கல்லடிக் கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்

Suganthini Ratnam   / 2014 மே 14 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடிக் கடற்கரையில் இளைஞர்  ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் புதன்கிழமை (14) தமக்கு தகவல் வழங்கியதாகவும் பொலிஸார் கூறினர்.  
சடலமாக கரையொதுங்கியவரின்  சட்டைப் பையினுள்; காணப்பட்ட வங்கி ஆவணத்தின்படி எம்.லதீஸன்,   அடையாள அட்டை இலக்கம் 9129718058 வி. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

கறுப்பு நிற நீளக் காற்சட்டையும் இளஞ்சிவப்பு வர்ண மேலங்கியும் அணிந்த இந்தச் சடலத்தின் கண்புருவங்களை மீன்கள் கடித்திருப்பதாகத் தோன்றுவதாகவும்  பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X