2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மனைவி வெட்டிக்கொலை; கணவர் தலைமறைவு

Suganthini Ratnam   / 2014 மே 20 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கரிக்காமுறிப்புக் கிராமத்தை வதிவிடமாகக் கொண்ட ஒரு வயதுடைய குழந்தையின் தாயான ராமநாதன் வசந்தி (வயது 31) என்பவர் அவரது  வீட்டில் திங்கட்கிழமை (19) வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக முருங்கன் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இப்பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இப்பெண்ணுக்கும் இவரது கணவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை இடம்பெறுவதாக அயலவர்கள் தெரிவித்தனர்.

கழுத்துப் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இப்பெண்ணின் சடலத்தைக் கண்ட அயலவர்கள்,  கிராம அலுவலகருக்கு தகவல் வழங்கினர்.

இந்நிலையில், இது தொடர்பில் முருங்கன் பொலிஸாருக்கு கிராம அலுவலகர்  தகவல்  வழங்கியதைத் தொடர்ந்து,  சம்பவ இடத்திற்கு வந்து பொலிஸார் விசாரணைகளை  மேற்கொண்டனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு செவ்வாய்க்கிழமை (20) வந்து விசாரணை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம், சடலத்தை  பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சடலம் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விரிவான  விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X