2025 ஜூலை 16, புதன்கிழமை

சடலம் அடையாளம் காணப்பட்டது

Suganthini Ratnam   / 2014 மே 27 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான் 

யாழ். கொடிகாமம் புகையிரத வீதியைச்; சேர்ந்த மார்க்கண்டு ரகுமாறன் (வயது 49) என்பவரே கொடிகாமம் கட்டைப்பறிச்சான் பிள்ளையார் ஆலயத்தின் முன் மண்டபத்திலிருந்து  செவ்வாய்க்கிழமை (27) சடலமாக மீட்கப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரது சடலத்தை உறவினர்கள் அடையாளம் காட்டியதாகவும் பொலிஸார் கூறினர்.

இதற்கிடையில், குறித்த இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்ட  தென்மராட்சி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சி.சி.இளங்கீரன், பிரேத பரிசோதனைக்கு  சடலத்தை  சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு பணித்தார்.

குறித்த ஆலயத்திற்கு பூஜைகளை நடத்துவதற்காக வந்த பூசகர், சடலத்தைக் கண்டு  பொலிஸாருக்கு  தகவல் வழங்கினார். இதனைத் தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .