2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

யாழில் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 02 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ற.றஜீவன்

யாழ். நாகர் கோவில் பகுதியில் பருத்தித்துறை வெளிச்சவீட்டு ஒழுங்கையைச் சேர்ந்த ஆசீர்வாதம் பொம்மைப்பிள்ளை (வயது 77) என்பவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (01) மீட்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் இன்று திங்கட்கிழமை (02) தெரிவித்தனர்.

நாகர் கோவில் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள்,  மேற்படி சடலம் இருப்பதைக் கண்டு பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தனது வீட்டுக்காரர்களுடன் சண்டையிட்டுக்கொண்டு  கடந்த 26ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறியதாகவும் இதன் பின்னர் நேற்றையதினம்  இவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X