2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பெண்ணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 04 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

சீதுவை லியனகே முல்ல பிரதேசத்திலுள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலத்தை நேற்று செவ்வாய்க்கிழமை சீதுவை பொலிஸார் மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 40 முதல்  45 வயது மதிக்கத்தக்கவர் எனத் தெரிவித்த பொலிஸார், சடலம் அடையாளம் காணப்படாத நிலையில்  நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சடலத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறும் சில தினங்கள் சடலத்தை வைத்திருந்து  அடையாளம் காண முயற்சிக்குமாறும் நீர்கொழும்பு வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி, வைத்தியர் சிறிஜயந்த விக்ரமரத்ன   உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X