2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

ஆவரங்கால் சிவன் கோவிலுக்கு முன்பாக சடலம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 08 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். ஆவரங்கால் சிவன் கோவிலுக்கு முன்பாகவிருந்து நெல்லியடியைச் சேர்ந்த நாகமுத்து சதானந்தன் (வயது 61) என்பவர்  சடலமாக  சனிக்கிழமை (07) இரவு மீட்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

வழிபாட்டிற்காக இக்கோவிலுக்கு  வந்தவர்கள்  சடலமொன்று  இருப்பதைக் கண்டு தங்களுக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து இச்சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா முன்னிலையில் இச்சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்  கூறினர்.

இது தொடர்பில் விரிவான  விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X