2025 ஜூலை 16, புதன்கிழமை

நடமாடும் கருகலைப்பு வண்டி: இருவர் கைது

Kanagaraj   / 2014 ஜூன் 14 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

முச்சக்கரவண்டியில் நடமாடும் கருகலைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் போலி வைத்தியர் மற்றும் அவருடைய உதவியாளரை மாத்தளையில் வைத்து இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் போலியான கருவை கலைப்பதற்காக  பொலிஸ் கான்ஸ்டபிளுடன் சென்றே இவ்விருவரும்  கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

20 ரூபா பெறுமதியான மருந்தில் முச்சக்கரவண்டிக்குள்ளேயே கருவை கலைப்பதாகவும் அதற்காக 18 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு மேலதிகமாக முச்சக்கரவண்டியின் கட்டணமும் அவர்களுக்கு செலுத்தவேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இருவரும், கண்டி,மாத்தளை, குருநாகல் உள்ளிட்ட பிரதேசங்களில் ஆகக்குறைந்தது 200 கருக்களை கலைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .