2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

நீர்கொழும்பில் இளைஞர் படுகொலை

Suganthini Ratnam   / 2014 ஜூலை 10 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு, கதிரானை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் முச்சக்கரவண்டியில் வந்த 04 பேரைக்  கொண்ட குழுவினால் வெட்டியும் குத்தியும்  படுகொலை செய்யப்பட்டதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில்  எட்டம்ப கஹவத்தை, தெமங்சந்தி பிரதேசத்தைச் சேர்ந்த புரூணா என்று அழைக்கப்படும் உடல் கட்டழகு வீரரான  கிரிஸாந்த திலும் சம்பத் பெர்னாந்து (வயது 27) என்பவரே படுகொலை செய்யப்பட்டார்.

தனது வீட்டிலிருந்து கதிரானைக்குச் செல்வதாக வீட்டாரிடம் கூறிவிட்டு வெளியில் சென்ற இவரை, முச்சக்கரவண்டியில் வந்த நால்வர்; இடைமறித்து முகத்தில் மிளகாய்த்தூளை வீசி கூரிய ஆயுதங்களால் வெட்டியும் குத்தியும் கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையின்போது,  படுகொலை செய்யப்பட்டவர் கொலைச் சந்தேக நபர்களான நால்வரில் ஒருவரை சில வருடங்களுக்கு முன்னர்  தாக்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.

நீர்கொழும்பு பொலிஸார் இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X