2025 ஜூலை 16, புதன்கிழமை

தோட்டத்திலிருந்து சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2014 ஜூலை 22 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல் 

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசத்துக்குட்பட்ட தோற்றாத்தீவு கிராமத்திலுள்ள  மரக்கறித் தோட்டமொன்றிலிருந்து தேற்றாத்தீவு கிழக்கைச் சேர்ந்த  ரெட்ணம் கிருஷ்ணபிள்ளை (வயது 50) என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த நிலையில், பிரேத பரிசோதனைக்காக இச்சடலம் வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை  ஒப்படைக்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன்  தெரிவித்தார்.

பிரேத பரிசோதனையின் பின்னரே இவர் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவருமெனவும் அவர் கூறினார். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .